செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய்…
வெர்ஜின் தேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

தென்னை மரத்தின், தேங்காயிலிருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். இயற்கை அன்னை நமக்கு கொடுத்த மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று. இது நமது தேசத்தின் முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று. நமது தேசத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதை அடைய வெளிநாட்டினரும் துடிக்கின்றனர். அங்கெல்லாம் இது விலை உயர்ந்த பொருள். ஆனால் நமது தேசத்தின் இயற்கை அன்னை நமக்கு அளித்த ஈடு இணை சொல்ல முடியாத அற்புதம்.
சுத்தமான தேங்காய் எண்ணெயை வெர்ஜின் கோக்கனட் ஆயில் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தாய்ப்பாலுக்கு மாசு கூறமுடியுமா!!? ஈடு இணை ஏதாவது உள்ளதா? அதேபோலத்தான், தேங்காய் எண்ணெய் தாய்ப்பாலுக்கு நிகரான தன்மையைக் கொண்டது.
இதில் இருக்கும் மூலப்பொருள் நல்ல கொலஸ்ட்ரால் மட்டுமே கெட்ட கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை.
இதை எந்த வெப்பநிலையில் கொதிக்க வைத்தாலும் இதன் தன்மை மாறுவதில்லை. இது சிறந்த நறுமணத்தை கொண்டது. நீர்ச்சத்து நிறைந்தது.
…..
தேங்காய் எண்ணெயின் பயன்கள்.

- இதனைப் பயன்படுத்துபவர்கள் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
- தலைமுடிக்கு இதை பயன்படுத்துவதால் நீண்ட அழகிய ஆரோக்கியமான கருங்கூந்தலை பெறலாம்.
- இதை உடம்புக்கு தேய்த்து குளிப்பதால் அழகிய ஆரோக்கியமான பளிச்சென்ற சருமத்தை பெறலாம்.
- தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் ஆனது, விலை உயர்ந்தது, ஆரோக்கியமானது, கெடுதல் இல்லாதது. நோய்க் கிருமியை அழிக்கும் வல்லமை பெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை மூடாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தன்மை பெற்றது.
- இந்த எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ரால் மிக குறைவு. எனவே, சமையலுக்கு பயன்படுத்தலாம்.
- மனிதனின் செரிமான மண்டலத்தின் செரிமான சக்தியை ஊக்குவிப்பதற்கு மிகச் சிறந்தது.
- இதைப் பயன்படுத்துவதால், நமது உடலானது உடல் களைப்பை நீக்கி சுறுசுறுப்பை அதிகப்படுத்தும் தன்மை கொண்டிருக்கலாம்.
- இதய நோய் மற்றும் இதய வால்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை கெட்ட கொழுப்பால் உண்டாகும் பிரச்சனைகள். இந்த சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தவிர்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- இந்த எண்ணெய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பண்பைக் கொண்டுள்ளது
- மனித உடலின் முக்கிய பிரச்சனைகளான, ஒவ்வாமை, பித்தக்கற்கள், செரிமான சக்திகுறைவு, குடல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த நிவாரணி ஆகும். இப்பிரச்சினைகளை உண்டாக்கும் பாக்டீரியா, வைரஸ்களை எதிர்த்து போராடும் சக்தி கொண்டது.
- இன்று பரவலாக காணப்படும் அதிக எடை பிரச்சனையை மிக எளிதாக தீர்க்க கூடிய வல்லமை பெற்றது. அந்த அதிக எடை பிரச்சனை கெட்ட கொழுப்பை கொண்டு உண்டாக்கக்கூடியது. இதில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளது. கெட்ட கொழுப்பு கிடையாது.
- சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்திபடைத்தது.
- இறுதியில் ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியது.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் ஆன, முறுக்கு, சீடை, வாழைக்காய் சிப்ஸ் மற்றும் பல தின்பண்டங்கள் தயாரிக்கும் பொழுது, இந்த எண்ணெயை பயன்படுத்தினால் அதன் ருசியும், மணமும் மிக அலாதிதான். இதை நம் குழந்தைகள் சாப்பிடும் வேகத்தையும் விருப்பத்தையும் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.
- வயிற்றுக்கு எந்தக் கேடும் இல்லாதது. எளிதாகச் செரிக்கக் கூடிய தன்மை பெற்றது.
- எல்லாவற்றுக்கும் மேல் உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்க நமது சித்தர்கள் மூலம் அருளப்பட்டது!.
- ஆன்மீக வழியில் எடுத்துக்கொண்டால், தெய்வீக சக்தி கொண்டது!!. தெய்வங்களுக்கு ஏற்றும் விளக்குகளில் இதை சேர்ப்பது தெய்வீக பலனைக் கொடுக்கக் கூடியது!!!.
வெர்ஜின் தேங்காய் எண்ணெய் தேவைக்கு உடனே அழையுங்கள்: +91 9677063560. FREE டோர் டெலிவரி வசதியும் உண்டு.