Standard Cold Pressed Oil

up-arrow

இலுப்பை எண்ணெய்- வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!

நமது முன்னோர்களும் சித்தர்களும் சொல்லி எழுதி வைத்துச் சென்ற அருமையான ஒரு மருந்து இந்த இலுப்பை எண்ணெய்.

இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது.

இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது.

1. எண்ணெயின் பயன்கள்

Mahua Flowers 1
  • மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது.
  • நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம்.
  • நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி.
  • இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணையை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும்.
  • ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணையை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
  • சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும்.
  • வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும்.
  • விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய்.
  • விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது இந்த எண்ணெய்.
  • கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும்.
  • காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சில துளிகளை இந்த எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
  • கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தாலும், சிலருக்கு இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதாலும் உண்டாகக்கூடிய கண் எரிச்சல், கண் அயர்ச்சி, கண்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து ஆகும். அதற்கு இலுப்பை எண்ணெயை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.
  • கண்பார்வையும் மிகத்தெளிவாக அமையும்.
  • வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது இந்த எண்ணெய்.
  • சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது இந்த எண்ணெய்.
  • ஆக மொத்தமாக இந்த இலுப்பை எண்ணெய் ஒரு தெய்வீக தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.

…..

ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் சிவபெருமானுக்கு உகந்த எண்ணெய்களில் முதன்மையானதாகவும், சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த எண்ணெய்.

close up olive oil pouring into bowl 23 2148364511

இந்த எண்ணெயில் சிவபெருமானுக்கு விளக்கேற்றி வந்தால், சகல ஐஸ்வர்யங்களும், மோட்சமும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் வாக்கு.

ஆக, மிக உன்னதமான தெய்வீகத் தன்மையும் கொண்டது இந்த எண்ணெய் ஆகும்.

https://standardcoldpressedoil.com/mahua-oil-iluppai-ennai

…..

Reference Links:

Shopping cart close
Whatsapp Chat