நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில்…
தேங்காய் எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நான்தான் தேங்காய் எண்ணெய் பேசுறேன்… என்னுள் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் எனக்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்தது.
முற்றிய தேங்காயில் இருந்து என்னை (எண்ணெய்) எடுக்கிறார்கள்.
‘தேங்காய் எண்ணெய்யா… அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை.
இதனால், தென்னிந்தியாவில் பலரும் என்னை (தேங்காய் எண்ணெயை) உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர்.
என்னில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் காரணமாக நான் 24° செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருப்பேன்.
அற்புத மருத்துவ குணங்கள்
நான் அழகுச் சார்ந்தது மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறேன்.
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் என்னில் உள்ளது.
1. உடல் எடை குறையும்உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் போதிய அளவு உள்ளன.உரிய அளவு தினமும் உணவில் என்னை சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்.
2. நோய் எதிர்ப்புச் சக்தி
என்னிலுள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது.
என்னில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறேன். இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறேன்.
3. சருமப் பாதுகாப்புஎன்னுள் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உங்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, உங்கள் சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவுகிறேன்.
என்னுள் உள்ள காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உங்கள் சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுப்பேன்.
கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்துகிறேன்.
அதுமட்டுமின்றி, சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக என்னிடம் நிறைந்துள்ளது.
மேலும், சருமம் வறண்டு போகாமலும், இளமையாகவும் வைத்து பாதுகாக்கிறேன்.
4. சருமப் பொலிவு அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள் என்னோட அட்வைஸ் என்னனா, இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு என்னை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
5. இதயக்கோளாறுஇதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% alcoholic acid என்னிடம் உள்ளது. சமையலில் என்னை சேர்ப்பதன் மூலம் alcoholic acid blood pressure மற்றும் cholesterol ஆகியவற்றை உங்களுக்கு வரவிடாமல் பாதுகாக்கிறேன்.
6. பெண்களுக்கு

Cold Pressed Coconut Oil / Nariyal Tel – 100% Pure, Unrefined, Perfect for Healthy Cooking, Heart Health, Boosting Immunity & Metabolism
கால்களில் உள்ள முடிகளை நீக்குவதற்கு முன், என்னை கால்களில் தடவிய பின்பு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு முடி எளிதில் வெளிவரும்.
தினமும், உங்கள் சருமத்தில் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறேன், முதுமைத் தோற்றத்தையும் தள்ளிப் போடுகிறேன்.
தலைக்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக என்னை தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் நான் பாதுகாக்கிறேன். மேலும், குளிப்பதற்கு முன்பும் என்னை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.
தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
சில நேரம் தேங்காய் எண்ணெய் முழு மேனியின் ஈரப்பதமாகப் பயன்படுகிறது. இது lotion-ஐ விட பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கூடுதலாக, தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதம் ஆகியவற்றைக் கூட்டுகிறது.
தேங்காய் எண்ணெயுடன் வெண்ணெய், கூழாங்கிழங்கு, ஆப்ப சோடா மற்றும் உப்பு அனைத்தையும் கலந்தால் இயற்கையான வாசனை திரவியம் கிடைக்கும்.
7. கூந்தல் பாதுகாப்புகூந்தலை பாதுகாப்பதில் எனக்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான (தேங்காய் எண்ணெயில்) புரதச் சத்து உள்ளது.வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் உங்கள் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடைய செய்கிறேன், பொடுகுத் தொல்லைக்கும் நிவாரணம் கிடைக்கும்.
8. மசாஜ்உங்கள் உடல் முழுவதும் மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
9. தோல் நோய்களை நீக்கஎன்னில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது.
10. மலச்சிக்கல்ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை சரி செய்கிறேன். இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதை நீக்குகிறேன்.
11. உதட்டை பராமரிக்கலிப்ஸ்டிக், வெண்ணெய் போன்றவற்றை விட – என்னை உதட்டுக்கு தடவினால், நாள் முழுவதும் வறட்சியில் இருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்குகிறேன்.சருமத்திற்கு ஈரப்பதமூட்ட பெட்ரோலியம் ஜெல்லி தவிருங்கள்.பெட்ரோலியம் ஜெல்லி புற்றுநோயை உருவாக்கும் சாத்தியக் கூறு அதிகம். நான் சரும தொற்றை எதிர்த்து போராடுகிறேன்.
12. சிறுநீரகம்சிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் உங்கள் உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.என்னை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
13. தோல் உரிதல்ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி சர்க்கரையுடன் மூன்று கரண்டி தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு வைத்து பின் சிறிது நேரம் கழித்து அந்த எண்ணெயைச் சருமத்தில் தேய்த்துக் கொண்டால் தோல் உரிவது குறைந்து, சருமம் மென்மையாக இருக்கும்.
14. மேக்கப் ரிமூவர்
மேக்கப்பை நீக்குவது கடினம், அதிலும் waterproof கொண்ட மேக்கப்பாக இருந்தால் அழிப்பது மிகவும் கடினம்.ஆனால் இது போன்ற கடினமான அலங்காரங்களையும் முகத்திலிருந்து நான் எளிதாக நீக்கிவிடுவேன்.
15. கால் மற்றும் கை பாதுகாப்பு
தினமும் தேங்காய் எண்ணெயைச் சருமத்தில் தேய்ப்பதால் நகங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.வறண்ட பாத வெடிப்புக்கு, தினமும் படுக்கப் போகும் முன் தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், உங்கள் கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து பார்க்க அழகாக இருக்கும்.
16. குளிர்புண்
தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதனால் இயற்கையான ஈரப்பதத்தைத் தருவதுடன், தொற்றுலிருந்தும் காக்கிறது. இதுமட்டுமல்லாமல், உங்களின் உதடுகளை மென்மையாக்கவும் செய்கிறது.
17. கூந்தல்
தேங்காய் எண்ணெயை முடிகளில் குளிப்பதற்கு 30-40 நிமிடங்களுக்கு சமமாக தடவி பின் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் பார்ப்பதற்கே மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும், கூந்தல் உதிர்வும் குறையும்.
18. நோய் தொற்றுக்களை வரவிடாது
தேங்காய் எண்ணெய் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும், சளிக் காய்ச்சல், தட்டம்மை போன்ற கிருமிகளின் தாக்குதலில் இருந்து நோய் தொற்று வரவிடாமல் நம்மை காக்கும்.
19. செரிமானம் மற்றும் உடல் எடையை குறைக்க

Cold Pressed Coconut Oil / Nariyal Tel – 100% Pure, Unrefined, Perfect for Healthy Cooking, Heart Health, Boosting Immunity & Metabolism
தேங்காய் எண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலம் இதிலுள்ள கொழுப்பு அமிலமானது உணவை சீக்கிரமாக செரிக்க செய்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை விட இயற்கை மரச்செக்கு தேங்காய் எண்ணெயில் இருந்து கிடைக்கும் பலன்கள் அதிகமாகவே உடலுக்குக் கிடைக்கிறது.