Standard Cold Pressed Oil

up-arrow

எண்ணெய் பன்னிரெண்டு வகைப்படுத்தப்படும். அவை என்னன்ன?

எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும்.

எள் என்பதை ‘திலம்’ என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர்.

இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும் எண்ணெய் என்றே குறிப்பிடுகின்றனர்.

இவை தயார் செய்யும் முறையைக் கொண்டு பன்னிரெண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.. அவை..

  1. கொதிநெய் – ஆமணக்குமுத்து முதலியவற்றை வறுத்து, இடித்து நீரில் கலக்கி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைப்பதால் உண்டாவது.
  2. உருக்கு – வெண்ணெய், கோழிமுட்டைக்கரு முதலியவைகளை உருக்குவதால் உண்டாவது.
  3. புடநெய் அல்லது குழிப்புட நெய் – அடியில் துளையிட்ட பானையில் சேங்கொட்டை, சிவனார்வேம்பு முதலியவற்றை பக்குவப்படி செயது நிரப்பி, மேலே மூடி மண்சீலை செய்து ஒரு குழி தோண்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து மேலே சரக்குள்ள பானையை வைத்து புடம் போடுவதால் அடியில் இருக்கும் சட்டியில் இறங்கி இருப்பது.
  1. சூரியபுடநெய் – எள்ளுடன் சேர்த்து அரைத்த கல்க மரந்தை (சூரிய) வெய்யிலில் வைத்து அந்த வெப்பத்தின் மூலம் உண்டாக்குவது.
  2. தீநீர்நெய் – சந்தனக்கட்டை முதலியவைகளைத் தூளாக்கிப் பட்டி கட்டித் தண்ணீரில் இட்டு இறக்குகின்ற தீ நீரினால் உண்டாவது.
  3. மண்நெய் – சேறில்லாத நிலத்தில் இருந்து தானாகவே கொப்பளித்து உண்டாவது.
  4. மரநெய் – மரத்தில் வெட்டப்படும் இடத்தில் உண்டாவது.
  5. சிலைநெய் – உயர்ந்த மலைகளிலிருந்து வழிந்து வருவது.
  6. நீர்நெய் – புழுகுச் சட்டம் முதலியவைகளை இடித்து, நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைப்பதனால் உண்டாவது.
  7. ஆவிநெய் – மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காயந்த மண் சட்டியில் போட்டு அதன் மேல் தண்ணீர் நிறைந்த தட்டு ஒன்றை வைக்க அந்தப் புகையால் தட்டின் அடிப்பாகத்தில் உண்டாவது.
  8. சுடர்நெய் – கெந்தகம் முதலிய சரக்குகளை அரைத்துப் புதுத்துணியில் தடவி இரும்புக் கதிரி சுற்றிக் கட்டி அதை ஒரு முனையில் கொளுத்தி பெறப்படுவது.
  9. பொறிநெய் – எள், கடலை, தேங்காய் முதலிய வித்துகளிலிருந்து செக்கு போன்ற பொறி (இயந்திர) கருவிகளால் எடுக்கப்படுவது.

…..

இந்தப் பன்னிரண்டு வகை நெய்களும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படும்.

  1. முடிநெய் – தலைக்கு இடுகின்ற நெய்
  2. குடிநெய் – உள்ளுக்குக் குடிக்கும் நெய்
  3. பிடிநெய் – தோல் மீது தடவிப் பிடிக்கும் நெய்
  4. தொளைநெய் – உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் இடுகின்ற நெய்
  5. சிலைநெய் – புரைகளின் வழியாக ரத்தம், சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் கெட்ட ரணங்களுக்கு இடுகின்ற நெய்

…..

Source

…..

Shopping cart close
Whatsapp Chat