நலம் தரும் நன்மைகள்

Benefit

1

அடர்த்தியான முடி வளரும்

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

Benefit

2

உடல் சூட்டை தணிக்கும்

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.

Benefit

3

பளிச் பற்களுக்கு

தினமும் காலையில் நல்லெண்ணெயால் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அதாவது, வாயில் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும்.

Benefit

4

ஆரோக்கியமான இதயம்

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

Benefit

5

கண்களுக்கு நல்லது

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

Benefit

6

புற்றுநோய்

நல்லெண்ணெயில் மக்னீசியத்துடன் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

Benefit

7

சரும பராமரிப்பு

நல்லெண்ணெயில் துத்தநாகம் நிறைவாக உள்ளது. இது சருமத்துக்கு மிகவும் அவசியமான தாதுஉப்பு. இது சருமத்தின் நெகிழ்ந்து கொடுத்து பழைய நிலைக்குத் திரும்ப உதவும் தன்மையை கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்குகிறது.

More Benefits

உடல்

ரிலாக்ஸ்

பொலிவான

சருமம்

நிம்மதியான

தூக்கம்

வலுவான

எலும்புகள்

முக்கிய குறிப்புகள்

குறிப்பு

1

ஆயில் மசாஜ்

வாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.

குறிப்பு

2

உண்ணக் கூடாது

பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

குறிப்பு

3

தவறான கருத்து

பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம் உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம்.

குறிப்பு

4

ஆயுர்வேத முறை

பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது.

குறிப்பு

5

சமீபத்திய ஆய்வுகள்

நம்முடி வளர்ச்சிக்கு உதவுதல், எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு உதவுதல், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை சீராக்குதல், மனப்பதற்றத்தைத் தவிர்த்தல், புற்றுநோய் செல்களை அழித்தல் உடல் முழுமைக்குமான ஆரோக்கியத் தீர்வை வழங்குவதில் நல்லெண்ணெய்க்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்று சொல்லலாம்.

BUY GINGELLY OIL

All copyrights reserved by Standard Cold Pressed Oil